ஜனாதிபதிக்கு பித்து பிடித்துள்ளது -சபையில் வாசுதேவ எம்.பி கருத்து!SamugamMedia

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்தி விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார் எனவும் அவ்வாறாயின் ஜனாதிபதிக்கு பித்து பிடித்துள்ளது கருதி அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (09) அமர்வில் உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார, சர்வதேச நாணய நிதியம் ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக உள்ளது என்று தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதால் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள முடியும் என குறிப்பிடும் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நாணய நிதியத்தின் கடும் நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு குறிப்பிடாமல் இருப்பது பிரதான குறைப்பாடாக காணப்படுகிறது என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட நாடுகள் இன்றும் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலை காணப்படுகின்றன.மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். பொருளாதாரத்தை மேம்படுத்தி விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார் எனவும் அவ்வாறாயின் அவருக்கு பித்து  பிடித்துள்ளது என கருதி  ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Leave a Reply