வீட்டிலிருந்து தாவியோருக்கு ஏற்பட்ட சிக்கல்!SamugamMedia

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினராக உள்ள போதும் பிற கட்சிகளின் வேட்புமனுவில் போட்டியிடும் 16பேரை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என விளக்கம் கோரி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின்  நிரந்தர உறுப்பினராக இருந்துகொண்டு பிறகட்சிகளில் போட்டியிடும் உறுப்பினர்களிடமே முதற்கட்ட நடவடிக்கையாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபை உறுப்பினர் இ.இராகினி உட்பட 14 உறுப்பினர்களுக்கு எதிராகவே கட்சியின் செயலாளரால்  இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த கடிதத்திற்கு 14 நாட்களுக்குள் அவர்களிடமிருந்து விளக்கம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply