மூத்த அமைச்சருக்கு கொரோனா

கொழும்பு, பெப் 3: இலங்கை அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மஹிந்த அமரவீரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் குமார வெல்கம ஆகியோருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக, ஜனவரி 25 ஆம் திகதி வரை ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *