வாக்குச் சீட்டு அச்சுப் பணிகளுக்குத் தேவையான பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை- அரசாங்க அச்சகம்!SamugamMedia

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதிகள் மாற்றியமைக்கப்பட்ட போதிலும், அது தொடர்பான அச்சுப் பணிகளுக்குத் தேவையான பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சகம் தெரிவிக்கின்றது.

திறைசேரி செயலாளருக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அச்சக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன் நகல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான 75 சதவீத தபால் வாக்குச் சீட்டுக்கள் இதுவரை அச்சடிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளுக்காக 40 மில்லியன் ரூபா அரசாங்க அச்சகத்திற்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், அரசாங்க அச்சகம் ஏற்கனவே சுமார் 150 மில்லியன் ரூபா பெறுமதியான பணிகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply