வவுனியா – குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் நால்வர் அடங்கிய குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவம் கடந்த 7 ஆம்திகதி இடம்பெற்றது சம்பவத்தில் சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42), வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இரு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது உடற்கூறாய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை கௌசிகனின் சடலத்தில் வேறு எந்தத் தடயங்களோ, காயங்களோ இல்லாத காரணத்தால் அவரது மரணம் தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர்களின் இறுதி நிகழ்வு பலரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.
The post வவுனியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற குடும்பம்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.