நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு: சஜித் வெளியிட்டுள்ள தகவல்!SamugamMedia

நாட்டின் மருத்துவமனை கட்டமைப்பில் தற்போது  புற்றுநோய், இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்ப் பிரச்சினைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் இல்லை எனவும் உயிர்காக்கும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு  பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக செயற்பட்ட போது, இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஐக்கிய மக்கள் சக்தியால் செயல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் ஊடாக உதவி கோரப்பட்டதாகவும், இந்த பற்றாக்குறை தற்போது தீவிரமாக நிலவுவதாகவும், இதன் காரணமாக முக்கியமான பல சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நோய் தடுப்பு துறையில்,குடும்ப சுகாதார சேவை பிரிவு மட்டத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா மற்றும் விட்டமின்களுக்கும் பெரும் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பில் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஏதேனும் மருந்து, உபகரணங்கள் தட்டுப்பாடு நிலவுவதாக இருந்தால் அதுதொடர்பான பெயர் பட்டியலை எதிர்க்கட்சியிடமும் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply