
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்தை அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
அப்போது இலங்கைக்குத் தேவையான ஆயுதங்கள் முக்கியமாக சீனாவிடமிருந்து வாங்கப்பட்டவை.
செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்துள்ளது.
யுத்த காலத்தில் கறுப்பு சந்தையிலிருந்து டொலரைப் பெற்றுக்கொண்டு வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக அண்மையில் நிதியமைச்சர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.