
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி விரிவுரையாளர் மறைந்த டில்காந்தி நவரட்ணத்தின் இறுதிக் கிரியைகள் மொனராகலை மரகலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றது.
நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை-சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியதன் மூலம் தில்காந்தி தமது சொந்த ஊருக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அத்துடன் செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தல் போன்ற துறைகளிலும் அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தபோதே தமது திறமையை அவர் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.