
மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள தொலைதூர பயணிகள் முன்பதிவு நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த சேவையானது மட்டக்களப்பில் இருந்து கொழும்பு மற்றும் ஏனைய மிக தூர பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இணையத்தில் ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பயணிகள் இணையவழி முறையின் மூலம் முன்கூட்டியே ஆசனங்களை இதன் ஊடாக முன்பதிவு செய்ய முடியும்.
குறித்த புதிய நிலையம் திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து பேரூந்து நிலையத்திற்குச் செல்லும் முதலாவது பேருந்தை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சாமர நிலங்க மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
