
க.பொ.த உயர்தரப் பரீட்சையை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
மனுவில் கோரப்பட்ட நிவாரணத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா தெரிவித்தார்.
இந்நிலையில், திட்டமிட்டபடி க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.