அகதி முகாமில் தங்கியிருந்த இரு ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு தப்பியோட்டம் – தமிழக உளவுத்துறை தீவிர விசாரணை SamugamMedia

இந்தியாவின் தமிழகத்தில் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு சென்றமை தொடர்பில் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனரென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது தமிழகத்திற்கு அகதியாக சென்று  மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஒருவர் மீது குற்ற வழக்குகள் சில நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்று மாயமாகினர்.

இது குறித்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள ஒருவரின் மனைவியிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த போது அவர்கள் இருவரும் மீன் பிடிக்க சென்று கரை திரும்பவில்லை என தெரிவித்திருந்த நிலையில் இருவரும் இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் தப்பி சென்றது தெரியவந்துள்ளது.

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ் முகாமில் இருந்து தப்பிச் சென்ற இருவர் குறித்து இந்திய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை பாதுகாப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தன் அடிப்படையில் இலங்கையிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply