மீனவர்கள் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதிமன்றம் தடை உத்தரவு!

பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் நடைபெறும் மீனவர் போராட்டத்திற்கு நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் மீனவர்களை அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, தமது போராட்டத்தினைக் கைவிடப்போவதில்லை என்று மீனவர்கள் உறுதியாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *