
கொழும்பு, பெப் 3: ஹங்வெல்ல, தும்கொலஹேனவில் அமைந்துள்ள பெயிண்ட் ரின்னர் தயாரிக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோட்டை தீயணைப்புப் பிரிவு மூத்த அதிகாரி கூறுகையில் ” ஹங்வெல்ல, தும்கொலஹேனவில் அமைந்துள்ள பெயிண்ட் ரின்னர் தயாரிக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும், நான்கு தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.