திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீட்டு விழா இன்று! SamugamMedia

கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் எழுதிய “திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம்” எனும் நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் (11.03.2023 ) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்ற யாழ்.பிராந்திய நிலையத்தில் இடம்பெற்றது. 

அதில்,  பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா , மலர் வெளியீட்டிற்காக  யாழ் பல்கலைக்கழக  முன்னாள் துணை வேந்தர்  என்.சண்முகலிங்கன், முதல் பிரதி வழங்குவதற்காக யாழ் பல்கலை  முன்னாள் கலைப்பீடாதிபதி அ.சண்முகதாஸ் தம்பதிகளும், அறிமுகவுரை வழங்குவதற்காக எந்திரி ச.சந்தோஷன் அவர்களுடன் எந்திரி ச.சர்வராஜா , கலாநிதி. ஆறு.திருமுருகன் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

நிகழ்வில் தலைமையுரையானது  சுப்பிரமுனிய கோட்டத்தின் முதல்வர் ஆன்மிகசுடர்  ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளால் ஆற்றப்பட்டது. அத்துடன், ஆசியுரை நல்லூர் திருஞானசம்பந்தர்  ஆதின முதல்வர் சிறீலசிறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமச்சாரிய சுவாமிகளால் வழங்கப்பட்டது.

Leave a Reply