கோட்டா அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும்! – அமைச்சர் நம்பிக்கை

கோட்டா அரசாங்கம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும், யாரும் அவசரப்பட வேண்டாம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இலங்கையில் முதல் முறையாக ஒவ்வொரு கிராம அபிவிருத்திக்காக நிதி அமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார்

உயர்தர பரீட்சை சிறப்புற செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றும் கொரோனாத் தொற்றுள்ள மாணவர்களிற்கும் தனியாக பரீட்சை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், அனைத்து நடவடிக்கைகளிலும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

அதே போன்று, மின்சாரம் பரீட்சையின் போது துண்டிப்பு இல்லாமல் செயற்படுத்த வேண்டும். உயர்தர பரீட்சை என்பது ஒரிரு நாளில் நடைபெறும் பரீட்சை அல்ல. மாதம் முழுவதும் நடைபெறும் பரீட்சை இது. ஆகவே இவ்வாறான விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும்.

நேற்று முன்தினம் ஆசிரியர் சம்பளம் பற்றிய பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. மற்றும் ஒவ்வொரு நாட்டில் பல்வேறு விதமான பொருளாதார பிரச்சினை காணப்படுகின்றன. பிரச்சினைக்கு ஏற்றவாறு தீர்வு வழங்கப்படும். – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *