யாழில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உடுவிலில் மீட்பு! SamugamMedia

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று சுன்னாகம் பொலிசாரினால் உடுவில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நாச்சிமார் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  ஊடகவியலாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும் இன்றைய தினம் சுன்னாகம் பொலிசாரினால் உடுவில் லவ் ஒழுங்கை பகுதியில் இலக்கத் தகடு அற்றநிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதோடு மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் தப்பி ஓடியுள்ளார்.

நேற்றிரவு இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளை ஒருவர் செலுத்தி செல்வதை அவதானித்த சுன்னாக பொலிசார். அவரை பின்தொடர்ந்து சென்றபோது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பொலிசார் மோட்டார் சைக்கிளை போலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றநிலையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று காலை சுன்னாக பொலிஸில் தனது மோட்டார் சைக்கிள் என உறுதிப்படுத்திய நிலையில் மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாண பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்படவுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணக்குடா நாட்டில் நான்கு திருட்டு சம்பவங்கள்  இடம் பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply