முன்கூட்டியே வெளியாகியுள்ள சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள்! வெளியான தகவல் SamugamMedia

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் 11ம் தர மாணவர்களுக்காக நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர ஒத்திகை பரீட்சை தொடர்பான பல பாடங்களின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பொதுப் பரீட்சை தொடர்பான சிங்களம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்கள் தொடர்பான வினாத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் மத்திய மாகாணத்தில் அந்த தரங்களில் கல்வி கற்கும் பெருமளவிலான பிள்ளைகளுக்கு அநீதி ஏற்படுகிறது.

இவ்வாறான முக்கியமான பரீட்சையில் கூட இரகசியத்தன்மையை பாதுகாக்க முடியாவிட்டால், மாகாணத்தின் கல்வியின் நிலை குறித்து சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply