கண்ணீர்புகைக் குண்டால் இருவரும் உயிரிழக்கவில்லை – இதன் பின்னணியில் மர்மங்கள் உள்ளன- சர்வேஸ்வரன் சந்தேகம் ! SamugamMedia

கொழும்பில் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டு மட்டு அடிக்கப்பட்டிருந்தால் இருவர் உயிரிழப்பதற்கான வாய்பே இல்லை எனவும் இந்த இறப்பின் பின்னால் பல மர்மங்கள் இருப்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியவாளர்களின் கேள்விக்கு இவ்வாறு சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக பல்கலைகழகம் மற்றும் கல்வி நிலையங்களுக்குள் தன்னிச்சையாக இராணுவத்தினர் உள்நுழையமுடியாது என்றும் ஆனால் அண்மையில் களனி மற்றும் கொழும்பு பல்கலைகழகத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் பலரை தாக்கியுள்ளதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாக க.சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காட்டுமிறாண்டி தனமாக செயலுக்கு இராணுவத்தை கண்டிப்பதை விடவும் நாட்டினுடைய ஜனநாயத்தை சிறுமைப்படுத்திய ஜனாதிபதியையே கண்டிக்க வேண்டும் என்றும் க.சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply