யாழில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுப்பு!SamugamMedia

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் இன்று(13) நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் புற்றுநோய் பிரிவின் ஏற்பாட்டில் இலங்கையின் கல்விப்புலத்திலே 11வது பழமை வாய்ந்த கல்லூரியான யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 வது ஆண்டு  பூர்த்தி நிகழ்வின் ஒரு பகுதியாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நடைபவனியானது புற்றுநோயை ஆரம்பத்தில் இனங்கண்டு தெளிவுபடுத்துவதற்கான விழிப்புணர்வு சார் விடயங்களை பிரதானமாக முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் சென்ஜோன்ஸ் கல்லூரி சமூகம் இ யா போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply