மனுஷ நாணயக்காரவுக்கு விரைவில் முக்கிய பதவி!SamugamMedia

அண்மையில் ஜனாதிபதியின் இல்லத்தில் அமைச்சர்கள் பலரையும் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி அமைச்சரவைத் திருத்தம் குறித்தும், ‘வெகுஜன ஊடகம்’ என்ற தலைப்பை விரைவில் மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவை நீக்கிவிட்டு, மனுஷ நாணயக்காரவுக்கு அந்த அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் அரசாங்கத்தின் சில உயர் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக மற்றுமொரு வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தில் பல முக்கிய அரசியல் நிலைப்பாடுகள் மாறக்கூடும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

அரசாங்கத்தின் முக்கிய பங்குதாரர்களுக்கு இடையில் பூர்வாங்க கருத்துப் பரிமாற்றம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கான சுபகாரியங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *