யாழின் முக்கிய பகுதிகளில் சிக்கல்?SamugamMedia

யாழ்.முற்றவெளிப் பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் கலாசாரச் சீரழிவுகள் மீளவும் தலைதூக்கியுள்ளன என அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வீரசிங்கம் மண்டபம் முன்பாகவுள்ள பகுதிகள் மற்றும் முனீஸ்வரர் கோயில் போன்ற இடங்களில் இரவு வேளைகளில் இளைஞர்கள் நடமாட்டம் அதிகரித்து  காணப்படுகிறது.

இளைஞர்கள் சிலர் இந்தப் பகுதிகளில் நின்று போதைப் போதைப்பாவனை மற்றும் விற்பனையில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரியவருகிறது.

எனவே, இந்தப் பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்பு ரோந்து நடவடிக்கைகள் இரவு வேளைகளில்  இடம்பெறாமையால் இந் சட்டவிரோத செயல்கள் தலைதூக்குகின்றன.

எனவே இந்தப் புகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கலாசார சீரழிவுகளை கட்டுப்படுத்த பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தப் பகுதி மக்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply