தமிழ் இனஅழிப்பு யுத்தமே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்! யாழில் ஒத்துக்கொண்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் SamugamMedia

இனவழிப்பு இடம்பெற்றதால் தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்பதை ஒத்துக்கொள்கன்றீர்களா? என நாம் வினாவிய போதுஇ இனவழிப்பே இப் பொருளாதார நிலைக்கு காரணமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பிரதி நிதிகளும் ஆமோதித்ததாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பிரதி நிதிகளுக்கும் யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

சுமார் இரு மணித்தியாலங்கள் இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அவர்,

இன்று இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் சந்திப்பொன்றை மேற்கொண்டது. அந்த சந்திப்பின் போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக ஏன் போராடவில்லை என்றும் அதற்கெதிராகப் போராடும்  எம்முடன் ஏன் இணையவில்லை என வினவினர்.

சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் காலம் தொட்டு நாம் அடக்குமுறையிலே இருக்கின்றோம். அந்த வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் பழக்கப்பட்டதாகவும் தமிழ் மக்களுக்குக் காணப்படும் பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. 

தமிழ் மக்களின் உடமைகளுடன் உரிமைகளும் பறிபோவதுடன் 200 க்கு மேற்பட்ட விகாரைகள் தமிழ்ப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு பௌத்த இனவாதமானது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இராணுவ அடக்குமுறையும் தொடர்ந்தவண்ணமுள்ளது.

வடக்கில் தமிழ் மக்களுக்குப் பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் பிரச்சினைகள் காணப்படுகின்றது அதற்காக நீங்கள் தெற்கிலே குரல் கொடுங்கள். எங்களுடைய பிரச்சினைகளுக்காகப் போராடுங்கள். நாங்கள் உங்களுடன் இணைவதா இல்லையா என்பது தொடர்பில் பரிசீலிக்கின்றோம் என கூறினோம். 

அதற்கு அவர்கள், அங்கு சென்று போராட்டங்களை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.  

இனவழிப்பு இடம்பெற்றதால் தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்பதை ஒத்துக்கொள்கன்றீர்களா? என நாம் வினாவிய போது, பிரதானமாக இனவழிப்பே இப் பொருளாதார நிலைக்கு காரணமெனவும்  ஆமோதித்தனர். 

தாம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போம் என கூறியுள்ளனர். காலப்போக்கில் அவர்களின் நிலைப்பாட்டை  தொடர்ச்சியாகக் கவனித்த பின்னரே நாங்கள்  அவர்களுக்குப் பதிலளிப்போம். என்றார்

Leave a Reply