கிராமங்களுக்குள் அதிகரிக்கும் போதைபொருள்: வவுனியாவில் திடீரென ஒன்றுகூடிய முக்கிய அமைப்புக்கள்!SamugamMedia

வவுனியா பூந்தோட்டம் பகுதிகளை அண்மித்த கிராமங்களுக்குள் போதைப்பொருள் பாவனை அதிகரித்து செல்கின்றமை தொடர்பாக பொது அமைப்புக்கள் கூடி இன்று ஆராய்ந்துள்ளது.

குறிப்பாக பூந்தோட்டம், பெரியார்குளம், சிறிநகர், மதீனாநகர், மகாறம்பைக்குளம், அண்ணாநகர் போன்ற கிராமங்களுக்குள் போதைப்பொருள் பாவனையின் தாக்கம் அதிகரித்து செல்வதுடன், சிறுவர்களை இலக்குவைத்து இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
இதனால் ஏற்படும் கலாசார சீரழிவுகளை தடுப்பதற்கான விரைவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குறித்த கிராமங்களை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் ஒன்றுகூடி ஆராய்ந்தது.
இதன்போது, முதற்கட்டமாக குறித்த விடயம் தொடர்பாக நீதவான், மாவட்ட அரசஅதிபர், பிரதிபொலிஸ்மா அதிபர், பிரதேச செயலாளர், விசேட அதிரடிப்படை, மதுவரித்திணைக்களம் ஆகிய தரப்புகளுக்கு உடனடியாக குறித்த விடயத்தை தெரியப்படுத்தி விரைவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வலியுறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. 
அத்துடன், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply