முதன் முறையாக டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகரை தொடர்பு கொண்ட சிறிதரன்: ஈ.பி.டீ.பி தெரிவிப்பது என்ன.??SamugamMedia

கடந்த காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவு தேவைப்படும் போது சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம், மாவை சேனாதிராஜா, ஆகியோரே தொலைபேசி மூலம் அதிகமாக தொடர்பு கொள்வதாகவும் ஆனால் முதல் முறையாக சிவஞானம் சிறிதரன் தொடர்பு கொண்டு தமது ஆதரவை கோரியிருந்ததாக கட்சியின்
யாழ்ப்பாண மாவட்ட ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே முன்வைக்கப்பட்ட கோள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

அமைச்சரின் ஆவோசகரை சிறிதரன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவதாகவும் இதில் பிழை ஏதும் இல்லை என்றும் மாறாக எழுத்து மூல கோரிக்கையை கேட்டபோது அதற்கு சிறிதரன் இணங்கவில்லை என்றும் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்து மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் ஆதரவு வழங்கியிருப்பதகாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் தற்போது பல அணிகளாக உள்ளதாகவும் முன்பு தமிழரசு கட்சியின் கீழ் ஒரு அணியாக இருந்ததாகவும் தற்போது தனித்தனி கட்சியாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் குழப்பகரமான சூழல் காணப்படுவதாகவும் எனவே தான் தாம் எழுத்து மூலமாக கோரிக்கையை கோரியிருந்ததாக ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
         

Leave a Reply