இந்தியாவிலிருந்து புத்தளத்திற்கு வந்த முக்கிய பொருட்கள்: கடற்படை எடுத்த அதிரடி நடவடிக்கை!SamugamMedia

புத்தளம் மூக்குத் தொடுவா கரையோரத்தில் நேற்று இரவு பீடி இலைகளை கடத்துவதற்கு முற்பட்ட ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு, பீடி இலைகளை சட்டவிரோதமாக வாகனத்தில் ஏற்றுவதாக தம்பபண்ணி கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய உடப்பு கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலைகள் மற்றும் காய்ந்த மிளகாய் கொத்தமல்லி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன்போது நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன்போது 36 உறைகளில் 1128 கிலோ பீடி இலைகள் 4 உறைகளில் 99 கிலோ காய்ந்த மிளகாய் 8உறைகளில் 129 கொத்தமல்லி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியொன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி சுமார் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த பீடி இலைகள், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள்,காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி கடத்தலுக்கு பயன்படுத்திய லொறி ஆகியவற்றை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தம்பபண்ணி கடற்படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply