தேசிய இளைஞர் படையணியினால் நடாத்தப்பட்ட தொழில் பயிற்சிகளை நிறைவு செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை திருகோணமலை – சேருவில தேசிய இளைஞர் படையணியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 200 இளைஞர்கள் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஜப்பான்,ருமேனியா,தென்கொரிய மொழி பாடநெறி, கனரக வாகன சாரதி பயிற்சி நெறி,அலுமினிய பிட்டிங் பாடநெறி உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்த இளைஞர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதன்போது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல கலந்து கொண்டார்.
ஏனைய அதிதிகளாக தேசிய இளைஞர் படையணியின் உதவிப் பணிப்பாளர் நிசாந்த புஷ்பகுமார, கிழக்கு மாகாண பணிப்பாளர் இமேஸ் குலத்துங்க, கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய இளைஞர் படையணியின் அலுவலகப் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.