பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் 78வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இரத்த தான முகாம் முன்னெடுப்பு!SamugamMedia

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் 78வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.முருகவேள் தலைமையில் பழைய மாணவர் சங்க செயலாளர் ம.பிரகாஷ் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இரத்ததான முகாமில் பழைய மாணவர்கள், பெற்றோர், பொது மக்கள், மாணவர்கள் என பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினரால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர். கே.விவேகானந்தன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இரத்ததான சேவையை வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவில் காணப்படும் இரத்த பற்றாக்குறையை ஓரளவேனும் தீர்க்க இரத்ததான முகாம் மேற்கொள்ளப்பட்டதாக பழைய மாணவர் சங்க செயலாளர் ம.பிரகாஷ் தெரிவித்தார்.

Leave a Reply