காதில் கேட்ட ரகசிய குரல்… நம்பி வாங்கிய லொட்டரியில் அடித்த அதிஸ்டம்! SamugamMedia

அமெரிக்காவில் பெண் ஒருவர் வீட்டுக்காக மளிகை சாமான் வாங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென அவருடைய காதில் கேட்டதாம் சத்தத்தினால் இன்று கோடீஸ்வரியாகியிருக்கிறார்.

வட கரோலினாவைச் சேர்ந்த Wendy Hester, மளிகை சாமான் வாங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது யாரோ அவர் காதில், ’லொட்டரி வாங்கு’ என கூறியதுபோல் இருந்ததாம் உடனே அவர், 8 பவுண்டுகள் கொடுத்து லொட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார்.

பிறகு Wendyக்கு அந்த லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது தெரியவரவே ஆச்சரியத்தில் திகைத்துப்போயிருக்கிறார்.

உடனடியாக தன் கணவரை அழைத்து, எனக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்திருக்கிறது. நாம் நமக்கு ஒரு வீடு வாங்கிவிடலாம் என்று கூறியிருக்கிறார் Wendy.

வீடு வாங்கும் Wendyயின் ஆசை நிறைவேறப்போவதுடன், அவர் கார் வாங்கிய கடனையும் அடைத்துவிடப்போவதாகவும் தெரிவித்த்துள்ளார். 

Leave a Reply