கடன் கிடைத்ததும் அமைச்சரவை மாற்றம்! – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு SamugamMedia

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசுடன் இணைவார்கள் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, அமைச்சரவைத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave a Reply