வீரவன்சவுக்கு எதிரான பிடியாணையை மீளப்பெற்றது நீதிமன்றம்! SamugamMedia

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

Leave a Reply