தமிழ் FM வானொலிக்கு வயது இரண்டு!

தமிழ் FM வானொலி தனது 2வது ஆண்டு நிறைவை இன்று(புதன்கிழமை) கொண்டாடுகின்றது.

குறுகிய காலத்தில் இரசிகர்களின் மனதை வென்று இலங்கையின் முன்னணி வானொலியாக திகழும் தமிழ் எப் எம், ஒரே ஒரு தமிழ் யூத் ரேடியோவாக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

தமிழ் FM, 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி தனது சேவையை ஆரம்பித்து, இரண்டு வருடங்களாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

எங்கும் எப்போதும் மக்கள் கேட்கும் ஒரே ஒரு வானொலியாக திகழ ஆரம்பித்துள்ள தமிழ் எப்.எம், தன்னுடைய தனித்துவத்தால் இன்று சர்வதேச அளவிலும் மக்கள் மனதை வென்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி அண்மையில் தமிழ் எப்.எம் இணையம் மூலம் உலக தழிழர்களை இணைக்கும் புதிய டிஜட்டல் APP மற்றும் இணைய தளத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்திருந்தது.

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் வானொலி ரசிகர்களை ஒன்றாக இணைத்து புதிய ஒரு அனுபவத்தை வழங்கவும் செய்திகள், உலக தகவலகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒரே இடத்தில் அறிந்துக்கொள்ளவும் Athavan’S Tamil FM எனும் பெயரில் புதிய Mobile APPயையும், WWW.TamilFM.online எனும் புதிய இணையத்தளத்தையும் மக்களுக்குக்காக அறிமுகம் செய்திருந்தது.

99.5 மற்றும் 99.7 அலைவரிசைகளினுடாக சிறந்த நிகழ்ச்சிகளையும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்திகளையும் தமிழ் பேசும் மக்களுக்காக தொடர்ந்து வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply