வங்கிகளின் செயற்பாடு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு! SamugamMedia

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் நாடளாவிய ரீதியில் 265 இலங்கை வங்கிக் கிளைகள் மற்றும் 272 மக்கள் வங்கிக் கிளைகள் ஆகியன இன்று(15) இயங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத​வேளை, மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் தலைமை அலுவலகம் உட்பட 265 கிளைகளின் அனைத்து பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரஸல் பொன்சேக்க அறிவித்துள்ளார்.

மக்கள் வங்கியின் 340 கிளைகளில் 272 கிளைகள், இன்று காலை 10.30 மணி வரை 75%க்கும் அதிகமான பணியாளர் வருகையுடன் முழுமையாகச் செயல்படுவதாக மக்கள் வங்கியின் CEO/GM கிளைவ் பொன்சேக்கா உறுதிப்படுத்தினார்.

Leave a Reply