மைத்திரி தலைமையில் அவசரமாக கூடவுள்ள சுதந்திரக் கட்சி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதனை கட்சியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டமானது இன்று மாலை 5 மணியளவில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் இடம்பெறவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அனுமதியளிப்பதற்காகவே இன்றைய மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *