மீண்டும் சரிந்தது இலங்கை ரூபா! தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? samugamMedia

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதத்தில் டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327.59 ரூபாயாகவும் விற்பனை விலை 344.66 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84 ஆகவும், விற்பனை பெறுமதி 335.68 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றம் வருகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,000.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,000.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 134,150.00 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply