
கொழும்பு, பெப் 4: நிதி தொடர்பான கோரிக்கையை இலங்கை விடுத்தால், அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகமொன்றை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டில் நிலவும், பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
அதேநேரம், நிதி அமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை பெறப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

