
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இயற்கை முறையில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட அறுவடை விழா இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
எவ்வித இரசாயன பொருட்களும் இல்லாது இயற்கை உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட குறித்த நெற்செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நிகழ்வில் மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
தனியார் ஒருவரால் இயற்கை முறையில் 3 ஏக்கரில் இவ்வாறு செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எதிர்காலத்தில் இவ்வாறு செய்கை மெற்கொள்ளவுள்ளதாக குறித்த விவசாயி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

