இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக உதவி திட்டங்களை வழங்கி வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியேகபூர்வ ட்விட்டரில் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பெருந்தோட்டங்களில் பணிபுரிகின்ற தமிழர்களுக்கு வீடமைத்து கொடுப்பதால் அவர்களின் வாழ்க்கைத்தரம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மேம்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.இந்தியாவில் இருந்து, சுமார் 200 வருடங்கள் முன்பு இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேறுவதற்கு தலா 28 லட்ச ரூபா மதிப்பில், 4000 வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களிடையே அண்மையில் கைச்சாத்தானது.
இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, பிரதமர் மோடி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில், இது ஒரு மைல்கல் என்றும் அண்ணாமலை மேலம் தெரிவித்துள்ளார்.