வடக்கு மாகாண பெண்களின் முயற்சியை ஊக்குவிப்பதற்கு வடமாகாண சபை உறுதுணையாக நிக்கும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை யாழ்கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வழங்கிய வாழ்த்து செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபை பெண்களை கண்ணியமாகவும், கௌரவமாகவும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எங்களின் நோக்கம் பெண்களுக்கு ஆரோக்கியமான குடும்பச் சூழலை உருவாக்குவது, அவர்களுக்கு அடிப்படை வீட்டு வசதி மற்றும் கல்வி உதவிகளை வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும்.
எமது மாகாணம் திறமையான பெண்களால் நிறைந்துள்ளமை
நினைவில் அத்தகைய பெண்களை மாகாணத்தில் வினைத்திறனாக்க பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன
பிரதேசங்களில் உள்ள வட்டாரங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மூலம்
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கான கலந்துரையாடல் நடத்தப்படு கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.

ஒவ்வொரு உள்ளூராட்சி அலகுகளிலும் பெண் தொழில்முனைவோரின் தயாரிப்புகள் விற்பனையை வாரந்தோறும் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம், விரைவில் அதை செயல்படுத்துவோம்.
பெண் தொழில்முனைவோரின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் வியாபாரத்தில் வெற்றி காண விரும்புகிறோம்.
வடமாகாண பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத்திலும் அவர்களின் முயற்சிகளுக்கு வடமாகாணசபை உறுதுணையாக நிக்கும் என்ற உறுதிமொழியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யார் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெபாஸ்கரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடமாகாண மகளிர் விவகாரம் அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வட மாகாண சபை திணைகள் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மதத் தலைவர்கள், மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.