மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக அவசிய தேவையாக காணப்படும் மின் தகனசாலையினை அமைக்க வேண்டும் என எம்மால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பேறாக கள்ளியங்காடு இந்து மயான வளாகத்தில் குறித்த மின் தகன சாலையினை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகளைக் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 40 மில்லியன் ரூபாய் செலவில் இலங்கையில் மிக உயர்ந்த புகை சீராக்கியுடன் (80M), அதிநவீன உபகரணங்களுடன் சுற்று சூழல்ப் பாதுகாப்பு அங்கீகாரத்தினையும் பெற்று நிர்மாணிக்கப்பட்ட மின் தகனசாலையின் செயற்பாடுகளைத் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணனால் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.



