திருகோணமலையில், காலாறப் போனவள் கவிதை நூல் அறிமுக விழா! SamugamMedia

கவிஞர் லலித கோபன் எழுதிய காலாறப் போனவள் கவிதை நூல் அறிமுக விழா ஓய்வு நிலை கோட்டகல்விப் பணிப்பாளர் சீ.  மதியழகன் தலைமையில் திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் 18 -03-2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம் பெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக மகுடம் சஞ்சிகையின் ஆசிரியர் வி. மைக்கல் கொலினும்,  சிறப்பு அதிதியாக நீங்களும் எழுதலாம் கவிதை சஞ்சிகையின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கமும் , கெளரவ அதிதிகளாக திருகோணமலை உயர் தொழிநூட்ப வளாகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவர் மா. தமிழ்ச்செல்வன்,  ஆங்கில விரிவுரையாளர் த . ஜீவகன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
நூல் பற்றிய உரைகளை கவிஞர்களான றியாஸ் குரானா,  சி. கருணாகரன்,  க . டனிஸ்கரன் விமர்சகர்களான சுதர்மமகாராஜன்,  வ. முரளிதரன் ஆகியோர் வழங்குவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *