சவேந்திர சில்வாவே வெளியேறு- யாழ் நாவற்குழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!SamugamMedia

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு இன்றையதினம்(18)  முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார்.

இந்நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நாவற்குழியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இனப்படுகொலையாளியே வெளியேறு, தமிழர் தேசத்தில் புத்தர் கோயில் எதற்கு?,  நிறுத்து நிறுத்து பௌத்த ஆக்கிரமிப்பை நிறுத்து உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply