ஜெனரல் சவேந்திர சில்வாவின் யாழ் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்ற முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நாவற்குழியில் அமைந்துள்ள புதிதாக அமைக்கப்பட்ட விகாரையில் இடம்பெறுகின்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக சவேந்திர சில்வா இன்று
யாழுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது தமிழர் பகுதியில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்ற பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்துமாறும் போர் குற்றவாளியான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியினர் முன்னெடுத்திருந்தனர்.