எம்.பியின் மெய்ப் பாதுகாவலரின் கைத்துப்பாக்கி மாயமானது – களத்தில் இறங்கிய பொலிஸ்.! SamugamMedia

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலயின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரபு பாதுகாப்பு அணியைச் சேர்ந்த இவர் சில தினங்களுக்கு முன்னர் விடுமுறைக்காக வீடு செல்லும் போது தன்னுடைய கைத்துப்பாக்கியைப் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பு அறையில் வைத்து விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுமுறை முடிந்து மீண்டும் கடமைக்கு சமூகமளித்த போது துப்பாக்கியைக் காணவில்லை எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply