சிங்கராஜ வனப்பகுதியை விட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை – அதிகாரிகளின் விசேட அறிவிப்பு SamugamMedia

சிங்கராஜ வனப்பகுதியில் சுற்றித்திரிகின்ற நெலுவா என்ற காட்டு யானை தற்போது கிராமங்களுக்கு வந்துள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டு யானையான நெலுவா, கொஸ்முல்ல, மேற்கு பட்டுஅங்கல மற்றும் மதுகட ஊடாக வந்து தற்போது ஹப்பிட்டிய கிராமத்தில் உள்ள மொரகஹகந்த வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காட்டு யானை கடந்த மூன்று நாட்களாக கிராமத்தில் தங்கியுள்ள நிலையில் உடவலவ வனவிலங்கு அதிகாரிகள் அதனை சிங்கராஜா வனப்பகுதிக்கு விரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கிராமங்களுக்கு இதுவரை காட்டு யானை வந்ததில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். காட்டு யானையை காண செல்வதை தவிர்க்குமாறு அப்பகுதி மக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காட்டு யானைகள் தற்போது பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply