உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பினை மார்ச் 28,29,30,31 மற்றும் ஏப்ரல் 3ஆம் திகதிகளில் நடத்தாமல் இருப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்றைய தினம் கட்சியின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்தார்.
இந்நிலையில், தபால்மூல வாக்களிப்புக்கான பொருத்தமான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.