கோட்டாகோகம’ கிராமத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசுமாரசிங்கவே முதன்முதலாக குடிசை அமைத்ததாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அந்த குடிசைகளுக்கு என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு மயக்க மருந்து கொடுத்து டெலிகொம் மற்றும் ‘லங்கா’ தனியார் மருத்துவமனையை விற்க முயல்வதாகவும், இந்தக் குற்றத்தை அனுமதிக்கக் கூடாது என்றும் வீரவன்ச சபையில் காட்டமாக பதில் வழங்கியிருந்தார்.