இன்று இலங்கைக்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதுவர் திரு.பூல் ஸ்டிபன்ஸ் மற்றும் தூதுவராலய அதிகாரிகளும் யாழ்ப்பாணம் மக்கள் பணிமனையின் பிரதிநிதிகளைச் நேரடியாகச் சந்தித்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் தற்போதைய பிரச்சினைகள் அபிலாஷைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இச் சந்திப்பின் போது, இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் அப்பாவிகளான வடமாகாண முஸ்லிம்கள் – குறிப்பாக யாழ் முஸ்லிம்கள் எவ்வாறு பலவந்தமாக இழுத்து தெடுக்கப்பட்டார்கள், இதனால் முஸ்லிம்களின் வாழ்விடம், சொத்துக்கள், சமூககட்டமைப்புக்களின் கட்டமைப்பு சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னமாகியுள்ளது இவ் விடயங்கள் தெளிவாக மௌலவி B.A.S. சுப்யானினால் எடுத்துக் கூறப்பட்டது.
தற்போது எமது மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தற்போது மீள்குடியேறி வாழும் மக்களின் பிரச்சினைகள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் ஆட்சிக்குவந்த அரசாங்கங்கள் மீள்குடியேற்றத் திட்டத்தை திட்டமிட்டு முறையாக நடைமுறைப்படுத்தாதன் விளைவாக இடப்பெயர்க்கப்பட்டு 32வருடங்கள் கழிந்து விட்டபோதும் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டபோதும் இன்னும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் திட்டமிட்டு இடம் பெறாததானது இலங்கையின் மூன்றாவது சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம் மக்களை புறக்கனிப்பதாகக் கருதப்படுவதுடன் இது எங்களது அடிப்படை உரிமையில் அலட்சியம் காட்டுவதாகவே கருதமுடிகின்றது.
யாழ்ப்பாணத்தில் 2800 குடும்பத்திற்குள் மேல் மீள் குடியேற்றத்திற்கு பதிவினை மேற்கொண்டிருந்த பொழுதிலும் 800க்கும் குறைவான குடும்பங்களே மிள்குடியேறியுள்ளனர்.
இவர்களும் பல்வேறு நெருக்கடிக்குள் அவதியுற்றுக்கொண்டிருக்கின்றனர். குடியிருக்க காணி இல்லை, சொந்தமான வீடு இல்லை, போதிய வருமானமில்லை, பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்கான சூழல் வீட்டிலும் சமூகத்திலும் இல்லை, ஆண்களின் வருமானம் போதியளவு இல்லை பெண்களும் ஏதேனும் வருமானம் தேடவேண்டும் இதற்கு மூலதனம் இல்லை தொழில் பயிற்ச்சி இல்லை இப்படியே இவர்களது அவல வாழ்க்கை தொடர்கின்றது.
மக்கள் பணிமனை இவ்வருடம் கல்விமேம்பாட்டுக்கும், சுயதொழில் பயிற்ச்சி, சுயதொழில் ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் போதைக்கு அடிமையாகுவதில் இருந்து இளம்சந்ததியினரை காப்பாற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையிலும், மிகச் சிறுபான்மை சமூகமாக இருக்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் வாழும் ஏனைய சமூகங்களுடன் ஒன்றினைந்து புரிந்துணரடவுடன் வாழ்வதற்குரிய சகவாழ்வு வேலைத்திட்டத்தையும் தனது குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றது.
நாங்கள் இச்சந்தர்பத்தில் தங்களிடம் வேண்டிக்கொள்வது, இன முரண்பாடுகளை தூண்டக்கூடிய வகையில் சிலர் அரசியல் நோக்கங்களுக்காக தூபம் போடக்கூடிய சிலகருத்துக்கள் அண்மைக்காலத்தில் வெளியிட்டுவருகின்றனர். இது எங்களுக்கு ஓர் அச்சுருத்தலாகவே தெரிகின்றது.
எனவே மக்களின் பாதுகாப்பு முதன்மையானது அதற்கு உத்தரவாதம். வேண்டும் நாங்கள் இழந்த சொத்துக்களுக்கு நஷ்டஈடுவேண்டும், எங்களது சொத்த இடங்களில் கௌரவமான மீள்குடியேற்றத்தை அரசாங்கம் திட்டமிட்டுச் செய்ய வேண்டும், எங்களது அரசியல் உரிமைகள் அபிலாஷைகளை நிறைவேற்றித்தரவேண்டும்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் தங்களது இராஜதந்திர நடவடிக்கைகளில் சம்மந்தபட்டோருக்கு தெரிவித்து தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என மௌலவி சுபியான் தெளிவாக எடுத்துக்கூறினார்.
இதற்கு பதிலளித்ததூதுவர்,
இச்சந்திப்பில் உங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் தெளிவாக விளங்கிக்கொண்டேன். நீங்கள் தெளிவாக விளங்கப்படத்தியதற்கு நன்றி. எங்களால் முடிந்த ஆதரவை நாங்கள் உங்களுக்கு தருவோம் எனக்கூறினார்.
இச்சந்திப்பில் இக்ரஃ மாதர் அபிவிருத்தி அமைப்பின் தலைவி A ஜமாலியா, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறினார்.
இக்ரஃ மாணவர் அமைப்பின் தலைவர் A. அம்ரின் மாணவர்கள் எதிர்நோக்கும் கல்விச் சவால்களை கூறினார் மேலும் A. அஞ்மல் M.முசின் ஆகியோரும் பங்குபற்றினர். தூதுவருக்கு ஆவணங்களும் கையளிக்கப்பட்டது.