தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்6 இல் இலங்கையிலிருந்து கலந்துகொண்டவர்தான் ஜனனி.
இவர் இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றியதோடு டிக்டொக் வீடியோக்கள் மூலம் பல்லாயிரக்கணக்காணோரின் மனங்களில் இடம்பிடித்தார்.
இவ்வாறான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலம் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
அதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இளைய தளபதியின் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார்.
இவ்வாறனதொரு நிலையில் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ஜனனி. அடிக்கடி தனது விதம்விதமான போட்டோசூட் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.
இவரது புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்காண லைக்ஸ்களுடன் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில், தற்போது சேலையில் புதிய போட்டோசூட் படங்களை பதிவிட்டுள்ளார். குறித்த படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஜனனி அடுத்த படத்திற்கும் தயாராகி வருகின்றாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.