'பௌத்த திணைக்களமாக மாறிய தொல்லியல் திணைக்களம்'- முகநூலில் வைரலாகும் முக்கிய பதிவு!SamugamMedia

தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இதுவரை காணப்பட்ட முகப்பு படம் கடந்த  இரு நாட்களுக்கு முன்பாக நீக்கப்பட்டு மற்றுமொரு முகப்பு படம் பதிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த முகநூல் பக்கத்தின் முகப்பு படத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் குறித்த முகநூல் பக்கத்தில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘தொல்லியல் திணைக்களம் இல்லை இது ஒரு ‘பௌத்த திணைக்களம்’ ,      “தமிழர் காணிகளை ஆட்டையைப்போடுதல், திட்டமிட்ட நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் தாங்களே புதைத்தலும் வெளிக்கொணர்தலும் மற்றும் வரலாறுகளை தமக்கு சார்பாக மாற்றியமைக்கும் இனவாத பெரும்பான்மை அரச திணைக்களம்” , “சோத்துக்கு பிச்சை எடுத்தாலும் இவங்கட இனவாதம் எப்பவுமே இவங்கள விட்டு போகாது என்றதுக்கு இது ஒரு நல்ல உதாரணம்”. “தொல்லியல் துறை இலச்சினையில் தங்கள் மதத்தை பிரதிநிதித்துவப்படுத்த தமிழ் மந்தர்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்த லோகோ வேறு எந்த மதத்தையும் பிரதிபலிக்காது அவர்களை மட்டுமே. அவர்கள் இன்னும் இனவெறியர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்”என்றவாறாக தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் முகநூல் பக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *