எதிர்வரும் சில நாட்களுக்குள் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கை வந்துள்ள உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் சியோ கந்தா (Chiyo Kanda) மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரும் இது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
குறித்த கடன் தொகை கிடைத்தவுடன் இலங்கையின் அடுத்த கட்ட பொருளாதார நகர்வுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் நீண்ட கலந்துரையாடல்கள் உலக வங்கியுடன் இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.